லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் சமந்தா கதாநாயகியாகவும் மனோஜ் பாஜ்பாய் வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் வித்யூத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்திலும் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்’ பாடல் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
மும்பை டான் கல்ச்சர், அசத்தலான சூர்யா கெட்டப், சூர்யா குரலில் பாடல் என ஏகப்பட்ட எதிர்பாப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதலங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் உண்டானது. குறிப்பாக இயக்குநர் லிங்குசாமியின் பில்டப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இதையடுத்து சில வருடங்களுக்கு பிறகு விமர்சனங்கள் குறித்து பேசிய லிங்குசாமி, எடிட் செய்ய கால அவகாசம் போதாமல் இருந்ததே காரணம் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனால் ரீ எடிட் செய்து இப்போது வெளியிடலாம் எனும் பிளானில் சமீப காலமாக இருந்தார். அதற்கான பணிகளிலும் இறங்கினார்.
இந்த நிலையில் இப்படம் 11 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகிறது. இதில் புதிதாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது லிங்குசாமியின் ஆசைப்பட்டது போலவே ரீ எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது. இப்போது ரீ எடிட் செய்யப்பட்ட ரீ ரிலீஸுக்கான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வழக்கமாக ரீ ரிலிஸாகும் படங்கள் ஒர்ஜினல் வெர்ஷனிலே ரிலீஸாகும், ஆனால் அஞ்சான் படம் புது விதமாக ரீ எடிட் செய்யப்பட்டு வரும் 28ஆம் தேதி வெளியாகிறது.
Follow Us