Advertisment

“80,000 பேர்... விஜய்யோடு எனக்கு கடைசி நடனம்” - அனிருத் ஆர்வம்

09 (25)

அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தில் இருந்து முதல் பாடலாக வெளியான ‘தளபதி கச்சேரி’ விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக ‘ஒரு பேரே வரலாறு’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்றாவது பாடல் விஜய் குரலில் ‘செல்ல மகளே’ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் ஒரு இசை கச்சேரியாகவும் நடக்கிறது. இதனால் ஏராளமான விஜய் ரசிகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு பல்வேறு ரசிகர்கள் இன்று புறப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் மிகுந்த கூட்டம் காணப்பட்டது. 

Advertisment

திரைப் பிரபலங்கள் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத்... பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், எ.பி.சரண் உள்ளிட்ட பலரும் இன்று விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இதில் அனிருத் புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது, “ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்துக்குறாங்க. மிகப் பிரம்மாண்டமா நிகழ்ச்சி நடக்குது” என்றார். பின்பு அவரிடம் விஜய்யுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு, “அவரோட இது எனக்கு கடைசி நடனம்” என பதிலளித்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் எந்தப் பாட்டு ஹைலைட்டாக இருக்கும் என்ற கேள்விக்கு, “எங்க காம்பினேஷனில் வந்த எல்லா ஹிட் பாடல்களையும் பாட போறேன்” என பதிலளித்தார். 

actor vijay anirudh Jana Nayagan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe