தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத். சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்த இவர், தனது முதல் படத்தின் மூலமாகவே திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். அந்த ஒரே படத்தின் மூலமாகவே உலகம் முழுவதும் பிரபலமானார். அடுத்தாக தொடர்ந்து, தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திற்கும் இசையமைத்து வந்த இவர், தென்னிந்திய சினிமாவிலும் பல மொழிகளில் அதிகப்படியான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், ஜெயிலர் 2, ரஜினி - கமல் இணையும் படம், ரஜினியின் 173வது படம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கில் நானியின் ‘தி பாரடைஸ்’, லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறாக இசையமைப்பதில் அவர் பிசியாக இருந்து வருகிறார். இந்த சமயத்தில் அவரிடம், நீங்கள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “இசைதான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் நான் என்னுடைய கவனத்தை செலுத்துகிறேன். 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறேன். இதுவரை பெற்ற வெற்றிகள் போதாது. இசையில், இன்னும் பல சாதனைகளைப் படைக்க விரும்புகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/02-recovered-recovered-recovered-2026-03-03-13-09-51.jpg)