அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நேற்று முன் தினம் நடந்தது. அதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் அங்கு இசை கச்சேரியும் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்து கொண்டனர். அதனால் இந்நிகழ்வு மலேசியா சாதனை புத்தகத்தில் அதிக பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இடம் பிடித்தது.
இந்த நிலையில் இப்படம் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணன் நடித்த பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் இப்படம் ரீமேக் இல்லை எனவும் முழுக்க முழுக்க விஜய் படம் எனவும் இயக்குனர் வினோத் இசை வெளியீட்டு விழாவில் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த சூழலில் பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் ரீமேக் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு விஜய் படம் என வினோத் தெளிவாக சொல்லிவிட்டார். அதனால் படம் வெளியாகும் வரை அதை அப்பத்தான் எடுத்து கொள்ள வேண்டும்.
வாரிசு பட படப்பிடிப்பின் போது விஜய் சாரை சந்தித்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். அரசியலுக்காக அவர் சினிமாவை விட்டு விலகுகிறார். அதனால் இது அவருடைய கடைசி படம். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை படம் வெளியான பிறகு பார்ப்போம். அதுவரை காத்திருப்போம். அதேபோல் படம் வெளியான பிறகு அவர்கள் எதை எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதை படம் வெளியான பிறகு பார்ப்போம். அதனால் இந்த கேள்வி அப்போது பேசுவது தான் சரியாக இருக்கும். அதுவரை இதை ரீமேக் என்று சொல்ல வேண்டாம். இது ஒரு விஜய் படம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/17-2025-12-31-15-33-37.jpg)