கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் நடித்ததோடு முதல் முறையாக சொக்கலிங்கம் என்பவருடன் இணைந்து இப்படத்தை ஆண்டிரியா தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நாளை(21.11.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆண்ட்ரியா தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், நீங்கள் தான் படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான ஒரு பில்டப் சீன், உங்களை சுற்றிய கதை என உருவாக்காமல் ஏன் நெகட்டிவ் ரோலை தேர்ந்தெடுத்தீர்கள் என கேள்வி கேட்டார்.  அதற்கு பதிலளித்த அவர், “ஒரு தயாரிப்பாளர்... தயாரிப்பாளராக மட்டும் தான் யோசிக்க வேண்டும். நடிகையாக யோசித்தால் அது சரியாக ஒர்க் ஆகாது. இந்தப் படத்தின் பட்ஜெட் எனக்கு ஓகே-வாக இருந்தது. அதேபோல் கமர்சியல் அம்சங்களும் இருந்தது” என்றார். 

Advertisment

பின்பு அவரிடம், தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலில் இந்த படம் வெளியாகி போட்ட காசு திரும்பி வரட்டும். அப்போது இந்த கேள்விக்கு ஒருவேளை என்னிடம் பதில் இருக்கலாம். என்னை தவிர்த்து நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த படத்தில் நான் நடித்தது ஒரு நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் அது ரொம்ப அழகாக எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை நான் தயாரிப்பாளராக இல்லாமல் போனால் இந்த கேரக்டர் எவ்வளவு குறைந்திருக்கும். நிறைய கட் செய்து, மாற்றி இருப்பார்கள். அதை ஒரு நடிகையாக நான் ஏன் எனக் கேட்டிருக்க முடியாது. என்னுடைய உரிமை மறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருக்கு பட்சத்தில் அந்த முடிவை எடுக்கக்கூடிய பவர் இருக்கிறது. கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் தீர்மானிக்கக்கூடிய ஒரு இடம் தயாரிப்பாளரிடம் இருக்கிறது. இங்கு நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இருப்பதால் அதன் மூலம் கதை சொல்லும் விதமும் மாறக்கூடும்” என்றார்.