கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் நடித்ததோடு முதல் முறையாக சொக்கலிங்கம் என்பவருடன் இணைந்து இப்படத்தை ஆண்டிரியா தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நாளை(21.11.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆண்ட்ரியா தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது கவின் குறித்து பேசிய அவர், “எனக்கு கவினை பற்றி அவ்வளவு தெரியாது. ஆனால் அவருக்கு உதவி இயக்குநருக்கான அறிவும் இருக்கிறது. அது இந்த படத்தில் அவருடன் நடிக்கும் போதுதான் தெரிந்தது. அவர் ஏற்கனவே உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். 

Advertisment

இதற்கு முன்பு கார்த்தியிடமும் இந்த செயலை பார்த்திருக்கிறேன். இது போன்ற நடிகர்கள் ஒரு நடிகராக, மட்டும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதையும் செய்வார்கள். அது ஒரு நல்ல விஷயம். இந்தப் படத்தில் கவின் நிறைய காட்சிகளை மேம்படுத்த உதவி இருக்கிறார். அவருடைய காட்சிகள் மட்டும் அல்லாமல் என்னுடைய காட்சிகளிலும் அதை செய்திருக்கிறார். அவருடைய நடிப்பை நான் ரசித்துப் பார்த்தேன்” என்றார்.