மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் நாளை வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு பாமக அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும்  திரௌபதி2 திரைப்படம் திருவண்ணாமலையை ஆண்ட வீரவல்லாளர் மற்றும் காடவராயர்களின் வரலாற்றை பேசுகிறது என்று அறிந்தேன். நம் முன்னோர்களின் வீரத்தையும் மக்கள் நலன் காக்கும் ஆட்சி முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தை விரைவில் திரையரங்கில் காண உள்ளேன். 

Advertisment

நாளை (23.1.26) வெளியாகும் திரௌபதி2 திரைப்படம் வெற்றிபெற இயக்குநர் மோகன் ஜி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.