டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அனஸ்வரா, “முதலில் ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி. படத்துக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. சமீப நாட்களா தியேட்டர் விசிட் போனோம். அதுல கிடைக்கிற ஆடியன்ஸின் கைதட்டல், ஆரவாரம் ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்தப் படம் நிறைய அன்போடு எடுக்கப்பட்டது. அதை ஆடியன்ஸும் சரியா உள்வாங்கிட்டாங்க. என்னுடைய டீமுக்கு நன்றி. ரெண்டு நாள் முன்னாடி ரஜினியை பார்த்தோம். அவர் கொடுத்த ரெஸ்பான்ஸ் எங்களுக்கு நிறைய அர்த்தத்தை கொடுத்தது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/11-44-2026-02-12-18-42-01.jpg)