டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் தற்போது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது. இதனால் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது படக்குழு. 

Advertisment

அந்த வகையில் ஒரு பேட்டியில் அபிஷன் ஜீவிந்த் குறித்து பேசிய அனஸ்வரா ராஜன், அவருடன் நன்கு இணைந்து நடிப்பதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ‘டம்ப்(Dumb)’ ஆக நடித்தேன் என்றார். இது சர்ச்சையாகியது. அதாவது சக நடிகரை டம்ப் எனக் கூறுவதா என விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு தற்போது அனஸ்வரா ராஜன் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “கருத்தைத் திரிப்பதோ, ஒன்றும் இல்லாத விஷயத்தை எதிர்மறையானதாக மாற்றுவதோ ஊடக அறம் அல்ல. உங்கள் மீது கவனம் குவிய வேண்டும் என நினைக்கிறீர்களா, அது நடந்துவிட்டது. ஆனால் நீங்கள் இதை விட மேம்பட்டவராக நடந்து கொள்ளுங்கள். 

Advertisment

சமீபத்தில், தேவையில்லாத விஷயங்களுக்கு எதிர்வினையாற்றவோ அல்லது முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபடவோ கூடாது என்ற விதியை நான் வைத்திருந்தேன். ஆனால், என்னை வேறு ஒருவராக திரிக்க பார்க்கும்போது அதனை மீறி பேச வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.