ஏ.எஸ் முகுந்தன் இயக்கத்தில் சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில் ஆனந்த்ராஜ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’. இதில் முனீஸ் காந்த், தீபா, ஆராத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

Advertisment

அந்த வகையில் ஆனந்த்ராஜ் பேசுகையில், “40 வருஷமா திரையுலகத்துல இருக்கேன். பணம் சம்பாதிக்கலாம், அது வேற விஷயம். ஆனா பணமே வாழ்க்கையாயிடக் கூடாது. எங்களுக்கு பணம் கம்மியா தான் இருக்கும் ஆனா மகிழ்ச்சியா இருப்போம். ஆனா, பணம் அதிகமாயிடுச்சுன்னா பணத்துக்கு தான் மரியாதை மகிழ்ச்சி இருக்காது. நம்மள பணம் காப்பாத்தாது. ஆனா பணத்தை நாம காப்பாத்த வேண்டி இருக்கும். நம்மள காப்பாத்திக்கணும்னா நம்ம சொல்றத பணம் கேட்கணுமே தவிர பணம் சொல்றத நம்ம கேட்க கூடாது. இதை ரஜினி சார் மாதிரி ஒரு பெரிய நடிகர் சொன்னா நீங்க கேப்பிங்க, நான் சொன்னா கேட்பீங்களான்னு தெரியல... 

Advertisment

ஒரு பெரிய நடிகர் தன்னை நானே செதுக்குன சிலை... அப்படின்னு சொன்னா ரசிப்போம். ஆனா நானும் கிட்டத்தட்ட அப்படித்தான் எந்த பின்பலமும் கிடையாது. திரையுலகத்துல என்னோட முன்னோர்கள் கிடையாது. நானும் ஆர். கே செல்வமணி, உதயகுமார்... எல்லாரும் போராடி வந்தவங்க. நான் சின்ன வயசுல செத்து சின்னாபின்னமா இருந்திருக்கேன். தீபாவளிக்கு ஊருக்கு போனா தலைய காமிச்சிட்டு நைட்டோட நைட்டா திரும்பி வந்துருவேன். ஏன்னா அச்ச உணர்வு இருக்கும். படிச்சு முடிச்சுட்டு திரைப்பட கல்லூரில மாணவனா சேர்ந்தாச்சு அடுத்து என்ன பண்ண போறோமுன்னு ஒரு பயங்கர பயம் ஒன்னு இருக்கும். என்னை விட அதிகமா சினிமாவை நேசித்தவர் என்னுடைய தகப்பனார். 

நான் ஒரு ஷூட்டிங்ல இருந்தப்போ நைட்டு கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னாங்க. எவ்வளவு நேரம்னு கேட்டப்ப 11மணி ஆகும்னு சொன்னாங்க. நானும் பரவால்ல சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனா 9 மணிக்கு ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து உங்களுக்கு முடிஞ்சிருச்சு சாரருன்னு சொன்னார். நானும் உள்ள போய் டவுட்டுக்கு கேட்டேன், அவங்களும் கன்ஃபார்மா சொன்னாங்க. அதனால சரின்னு கிளம்பிட்டேன். வீட்டுக்கு கிளம்றேன் திரும்ப ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் ஓடி வந்தார். சார் நாளைக்கும் நாளன்னைக்கும் டேட் கேட்டிருந்தோமே அது வேண்டாம் சாருன்னு சொன்னார். உடனே எனக்கு இன்னொரு போன் வருது,  என் தகப்பனார் தவறிவிட்டார்னு. அவருடைய சாவுக்கு நான் போகணும்னு என்ன ரெண்டு மணி நேரம் முன்கூட்டியே அனுப்பிச்சிட்டு ரெண்டு நாளைக்கு நான் அப்பாவோட இருக்கணும்னு என்னோட ஷூட்டிங்கை விட்டு கொடுத்தாங்க. என்னை விட சினிமாவை நேசித்தவர் எங்க அப்பா, நான் இங்க நடிகனா இருக்கறதுக்கு அவரும் ஒரு காரணம். வீட்டுக்கு போனதும் எங்க அப்பாவை பார்த்து நான் கேட்ட ஒரே கேள்வி, உங்க கூட இருக்கணும்றதுக்காக ஷூட்டிங்க ஃப்ரீ பண்ணிங்களாப்பா...” எனப் பேசிக்கொண்டிருந்தவர் அழுதபடியே அப்பாவுக்கு நன்றி சொன்னார். 

Advertisment

தொடர்ந்து கண்கலங்கையபடியே பேசியவர் “இதெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க, ஒரு பெரிய நடிகரா இருந்தா பெரிய விஷயமா மாறும். எனக்கு போட்டியே இல்லன்னு நினைக்கிறீங்க. இந்தப் படத்துல நடிக்கிற அளவுக்கு என்ன தள்ளிவிட்டது யாருன்னு நினைக்கிறீங்க... முதுகு ஃபுல்லா காயம், ரத்தம்... என்னை குத்தி குத்தி கொலை பண்ணிட்டாங்க. வீட்ல வந்து பேசிட்டு போவாங்க, அப்புறம் அந்த படம் மிஸ் ஆகும், யாரு காரணம்னு பார்த்தா அந்த பட கதாநாயகனா கூட இருக்கலாம். அவங்க தான் யார் நடிக்கனும்னு முடிவு பன்றாங்க. இந்த படத்துல நான் கதையின் நாயகனா நடிச்சிருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரியல. தயவு செஞ்சு கலையா கலையா மட்டும் பாருங்க” என்றார்.