ஈழத்தமிழர் இளைஞர்களின் இங்கிலாந்து படம்!

In

 

 

இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படமாக ஈழத்தமிழ் இளைஞர் பட்டாளம் நடித்துள்ள படமாக உருவாகியிருக்கிறது இன்ஃபிளுன்சர்.

 

 

இப்படத்தின் கதையானது ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.  உள்ளூர் குடும்பத்தால்  மீட்கப்பட்ட அவர்கள்; உண்மையான திகில் மனித இயல்பில் இருளில் தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும் இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா,

தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நீரோ  கில்பர்ட் இயக்கியிருக்கிறார். தற்பொழுது இப்படத்தில் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி எதிர்பார்ப்பை பெற்றுள்ளது இப்படத்தில் மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றுள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.

England Movie srilanga
இதையும் படியுங்கள்
Subscribe