சமீப காலங்களில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில், விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா மற்றும் சமீபத்தில் வெளியான அஜித்தின் மங்காத்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். மேலும் த்ரிஷாவும் நாயகியாக அறிமுகானார். மேலும், லைலா நந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல பெற்றிருந்தன. இப்படம் வெளியான அந்த காலகட்டத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்படம் தொடர்பாக அண்மையில் சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பட வசனங்களை அவர் பேசி ஒரு காட்சியாவது ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து லைலாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவதால் இப்படம் சரியான நேரத்தில் வெளியாவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிலையில் இயக்குநர் அமீர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இப்படம் என்னுடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படம். 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தலைமுறையும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் இந்த படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறார். இந்த திரைப்படம் வெற்றியடை எனது வாழ்த்துக்களென்று சொல்வதை விட நானும் அந்த வெற்றியை நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன். என்னை இயக்குநராக உருவாக்கி அழகு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் சூர்யாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்றார்.
Follow Us