மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’ திபாவளி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அமீர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் துருவ் விக்ரம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.அந்த வகையில் “மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு அவசியம். அவரும் பா.ரஞ்சித்தும் ஆயிரம் எதிர்ப்புகள் இருந்தாலும் அவர்கள் தங்களது படைப்புகளை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் உறுதுணையாக இருப்போம். பா.ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் நான் இறைவன் மிகப்பெரியவன் படத்திற்கு சென்றுவிட்டதால் நடிக்க முடியாமல் போனது. 

Advertisment

இதையடுத்து இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் டைரக்டராக இருந்து நடிக்க வந்தாலும் எனக்கு நெருக்கமான அல்லது மனதுக்கு நெருக்கமான ஒன்று இருந்தால் மட்டும் தான் நடிக்க ஒத்துப்பேன். மாரி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. வெற்றிமாறன் கேட்ட போது எப்படி நடிக்கிறேன் என ஒத்துக்கொண்டனோ மாரி கேட்டவுடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். வட சென்னைப் படத்தில் எப்படி நான் நடித்த ராஜன் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி வெற்றிமாறனை சேருமோ, இந்த படத்தில் நான் நடித்த பாண்டியராஜன் கதாபாத்திரத்துக்கு எதாவது வந்தது என்றால் அது மாரி செல்வராஜுக்குத்தான் போய் சேரும். மாரியும் ரஞ்சித்தும் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. 

நானும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவருடைய வெற்றியை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். சேது படத்தில் அவர் எப்படி இருந்தாரோ அதே உழைப்பை இந்த படத்தில் துருவிடம் பார்த்தேன். விக்ரம் சாரிடம் ஒரு வெறி இருக்கும். அந்த படம் ரிலீஸாகாமல் பிரச்சனையில் இருந்த போதும் போய் டப்பிங் பன்னிட்டு வருவார். சீரியல் ஒன்றிற்கு கதை ரெடி பண்ணுவோம் என சொல்லி என்னை அழைத்துக் கொண்டு கதை எழுத வைப்பார். அப்போது கேட்டுக்கொண்டே இருப்பார், நான் சரியாக வருவனா என்று. அதற்கு நான், கடைசி வரையும் சினிமாவில் இருப்பீங்கன்னு சொன்னேன். அந்த டைம்ல அஜித், விஜய்ன்னு இரண்டு பேர் அதிக ரசிகர்களை கொண்டு இருக்காங்க. அப்போது சேது ரிலீஸானது. அவர் சினிமாவை ஒதுக்கி ரெஸ்ட் எடுத்தால் தான் உண்டு. ஆனால் சினிமா அவரை விடாது. அவ்வளவு அர்ப்பணிப்பு. அவரிடம் இருந்த வெறி இப்போது துருவிடம் பார்க்கிறேன்.  

Advertisment

மாரி செல்வராஜிடம் ஒரு ரொமான்ஸ் இருக்கிறதா என ரஜிஷா சொல்லும் போதுதான் தெரிந்தது. அவங்க தண்ணிக்குள்ளே விழுந்த போது மாரி செல்வராஜ் கூலிங்கிளாஸுடன் குதித்ததாக சொன்னார். அவங்களுக்கு நீச்சல் தெரியாது. இப்போது எனக்கும் நீச்சல் தெரியாது. ஒரு வேளை நான் அந்த தண்ணிக்குள்ளே விழுந்திருந்தால் அசிஸ்டன்ண்டை கூப்பிட்டு பார்க்க சொல்லியிருப்பார். ஆனால் தமிழ் சினிமாவில் எம்.ஜி.அர். கூட செய்யாதது, கூலிங் கிளாஸுடன் குதித்தது. அதே போல் அவர் எல்லா சண்டைக்கு போகும் போதும் வாட்ச்சையும் கழட்டு கொடுப்பார். ஆனால் அவரை விட  மாரி செல்வராஜ் ஒரு படி மேலே போய்விட்டார். அதனால் தான் மாரியை நல்ல நண்பன் என்று ரஜிஷா சொன்னார். இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையைத் தாண்டி டான்ஸும் நன்றாக ஆடியிருக்கிறார். அவர் கண்டிப்பாக ஹீரோவாக வருவார்” என்றார்.