உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான அந்த நாளில், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. 

Advertisment

அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று மாலை நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. 

Advertisment

மேலும் நாளை (08.03.2026) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அமீர் தவெக மகளிர் தின கொண்டாட்டத்தை விமர்சித்துள்ளார். அதாவது, “மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு 'மகளிர் தின விழா' கொண்டாடுவதா?” எனக் கேட்டுள்ளார். 

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.  

Advertisment