முன்னணி நடிகர்களை வைத்துப்  படம் இயக்க வேண்டும் என்ற கனவு பெரும்பாலான இயக்குனர்களுக்கு இருப்பதை, பல்வேறு நேரங்களில் அவர்கள் வெளிப்படையாகவே பேசியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதில்  பல இயக்குனர்களுக்கு வெறும் கனவாகவே இருக்கும் நிலையில், திரைத்துறையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான  ரஜினி,கமல், விஜய், கார்த்திக் என பல முன்னணி நடித்துள்ளனர். தனது திறமையாலும், திரையில் அவர் கையாளும்  கதைக்களத்தின் தனித்தன்மையாலும் உச்சபட்ச இயக்குனர்களில் ஒருவராக மரிய இவர், அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisment

லோகேஷ் ஏற்கனவே கூறியிருந்த " இரும்புக் கை மாயாவி" படத்தில் சூர்யா நடிக்கவுள்ள நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த தகவல் உறுதி படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது அது சம்பந்தமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisment

சமீபத்தில் தெலுங்கில் பல படங்கள் வெளியாகி, அது ஆந்திராவையும் தாண்டி இந்திய அளவில் மாபெரும் வெற்றிகளைக்  குவித்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அளவில் மிக முக்கியமான படம் "புஷ்பா". இந்த படம் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று "பான் இந்தியா" படமாக மாறியது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள " இரும்புக் கை மாயாவி" படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. லோகேஷ், அல்லு அர்ஜுனை சந்தித்துப் பேசி  படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படம், அடுத்த ஆண்டு தொடங்கி 2027 மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.