உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் தன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா?   என்பதே கதைக்களம். 

Advertisment

சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார். கதையின் நாயகனாக அசோக்குமார் நடித்துள்ளார். இவர் முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது,பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரபல இயக்குனரும் நடிகருமான "யார்" கண்ணனின்  மகள் சாயாதேவி நடித்திருக்கிறார்.

Advertisment