போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகண்டா 2’. ‘14 ரீல்ஸ் ப்ளஸ்’ எனும் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா, ஆதிப் பினிசெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் இன்று தெலுங்கை தாண்டி தமிழ், இந்தி என மொத்தம் ஏழு மொழிகளில் வெளியாகவிருந்தது. ஆனால் இப்படம் வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “தவிர்க்க முடியாத காரணங்களால் அகண்டா 2, திட்டமிட்டபடி வெளியிடப்படாது என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisment

இது எங்களுக்கு ஒரு வேதனையான தருணம், மேலும் படத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு ரசிகர் மற்றும் திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏமாற்றத்தை அளிக்கும். அதை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளனர். மேலும் புது தேதி குறித்தான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.