தமிழக அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் அஜித். அஜித்தின் அனைத்து படங்களும் அவரது ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படும். அந்த வகையில், மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம் மங்காத்தா . இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலமாக முதன் முறையாக அர்ஜூனுடன் இணைந்து நடித்திருந்தார் அஜித். இது தவிர, திரிஷா, வைபவ், பிரேம்ஜி, ராய்லட்சுமி, அஞ்சலி, மகத் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் பெரிதளவில் பேசப்பட்டது. அஜித் இப்படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தாலும், இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே வெளிவந்த படங்களை மீண்டும் திரையரங்கில் திரையிடுவது என்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மங்காத்தா படமும் இன்று (23-01-26) மறுவெளியீடு (ரீ-ரிலீஸ்) செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆண்டு வெளிவந்த இப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீணடும் தற்போது திரையரங்கில் வெளியாகிறது.
இந்த நிலையில், திரையரங்கில் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகின்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் மேளதாளங்களுடன், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இப்படத்தை மீண்டு திரையில் பார்ப்பது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.
Follow Us