அஜித்குமார் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.   

Advertisment

இதனிடையே அஜித் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.  இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கிய அவர், துபாய் தொடங்கி மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து யூரோப்பியா உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 

Advertisment

இதனிடையே அவர் கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் நேற்று தனது மகளுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கொங்குநாடு ரைபிள் கிளப்பில் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. இறுதியில் அனைவருக்கும் அஜித் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “வளமான புத்தாண்டும் அழகான வாழ்க்கையும் அமைய வாழ்த்துகிறோம்” என்றுள்ளார்.