நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். 

Advertisment

துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸ் மற்றும் ஸ்பெய்னில் நடந்த 24ஹெச் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். இப்போட்டியை தொடர்ந்து டிசம்பரில் நடக்கும் ஆசியன் லெ மான்ஸ் தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் மற்றும் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். போட்டிகளில் இவரது தொடர்பான வீடியோக்கள் வைரலாகின. கடைசியாக தன்னை பார்த்து விசில் அடித்து ஆராவாரம் செய்த ரசிகர்களை எச்சரிக்கும் வீடியோ வைரலானது. 

Advertisment

திரைத்துறையை பொறுத்தவரை குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் தனது மனைவு ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் கேரளா, பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இக்கோயில் அஜித்தின் குல தெய்வ கோயில் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் தன் நெஞ்சில் பகவதி அம்மனை டாட்டூவாக போட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.