தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீபகாலமாக சினிமாவில் இருந்து கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை உறுதி செய்துள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அஜித்குமார் மற்றும் ஷாலினியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் ஒரு பூஜையில் கலந்துகொண்டார். அப்போது, பூஜை முடிந்த பிறகு, அஜித் ஷாலினியின் நெற்றியில் திருநீறு பூசுகிறார். பின்னர், அருகில் இருந்த பெண்கள் ஷாலினியை அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுமாறு கூறுகின்றனர். ஆனால், அஜித் “அது எல்லாம் வேண்டாம்” என்று மறுக்கிறார்.

இருப்பினும், அருகில் இருந்த பெண்கள் விடாமல், “என்ன ஷாலினி, இதெல்லாம்!” என்று செல்லமாகக் கேட்க, பின்னர் ஷாலினியும் அஜித்தின் காலில் விழுந்து பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றார். உடனடியாக, அஜித், “வீட்டுக்குப் போனதும் நானும் கால்ல விழணும்” என்று சிரித்தபடியே கூறுகிறார். இந்த வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

https://www.instagram.com/reel/DNIwxFBPNiy/?utm_source=ig_web_copy_link