அஜித்குமார் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே அஜித் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கிய அவர், துபாய் தொடங்கி மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து துபாயில் நடக்கும் 24 ஹெச் சீரிஸ் கார் போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே அவர் மோட்டஸ் ஸ்போர்ட்ஸ் பயணத்தின் ஆவணப்பட முன்னோட்டங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் துபாயில் அவரை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் அனிருத் அஜித்தை சந்தித்திருந்தார். இவரைத் தொடர்ந்து சிபிராஜ் தனது குடும்பத்துடன் சந்தித்திருந்தார். பின்பு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் சந்தித்தனர்.
அந்த வகையில் ஒரு குட்டி ரசிகர் அஜித்தை சந்திக்க வருகை தந்தார். அப்போது அவரின் ஷூவில் லேஸ் அவிழ்ந்திருந்ததை கண்ட அஜித் உடனடியாக கீழே குணிந்து அதை கட்டிவிட்டார். இந்த செயல் அங்கு இருப்பவர்களின் கவனத்தை பெற்றது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thala #AjithKumar tying a fan’s shoe..❣️ A Truly down-to-earth personality...🤝pic.twitter.com/VgB3y6KOeS
— Laxmi Kanth (@iammoviebuff007) January 21, 2026
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/21/10-47-2026-01-21-20-06-36.jpg)