அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் மலேசியா வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். 

Advertisment

அஜித்தின் இந்த கார் ரேஸ் பயணத்தை ஏ.எல்.விஜய் ஆவணப்படமாக்கி வருகிறார். மேலும் அஜித்தின் கார் ரேஸ் அணிக்கு விளம்பர படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த நிலையில் அஜித்தின் மோட்டர் ஸ்போர்ட்ஸ் பயணம் தொடர்பான ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. ‘ரேஸிங் என்பது நடிப்பு இல்லை அது உண்மை’ என்ற தலைப்பில் இந்த முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப் பயணம் கொண்டது முதல் கார் ரேஸிங்கில் கலந்தது வரை ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியுள்ளது. 

Advertisment

மேலும் பிரத்தியேகமாக ரேஸ் குறித்து அஜித் பேசும் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. அதில், “படத்தில் ரீடேக் இருக்கிறது. ஆனால் ரேஸிங்கில் ரீ-டேக் கிடையாது. நீங்கள் வெற்றியாளர்களை பார்க்கிறீர்கள், ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கண்ணீரை பார்த்திருக்க மாட்டீர்கள்’ என அஜித் எமோஷ்னலாக பேசும் பல விஷயங்கள் தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.