Advertisment

சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் அஜித்தின் சகோதரர்!

399

பிரபல நடிகர் அஜித்குமாருக்கு அனில் குமார் மற்றும் அனுப் குமார் என இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் அனில் குமார் ‘ஜோடி 365(Jodi365)’ என்ற மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஒ-வும் இவர் தான். இந்த நிலையில் இவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஹாலிவுட்டில் ரொமேன்ஸ் காமெடி ஜானரில் உருவாகும் ‘கோகோ அண்ட் நட்’ படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதில் மிஸ்டர் மேட்ச்மேக்கராக ஜோடி 365 இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நடிக்கிறேன். 

Advertisment

கடந்த அக்டோபரில் சென்னையில் ஜஸ்டின் பிரபாகரனின் துள்ளல் பாடலை பதிவு செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஜூன் மாதம் சிகாகோவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒரு மென்மையான காட்சியில் நடிக்கிறேன். ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதற்காக அடுத்த 100 நாட்களில் வலுவாகவும், ஃபிட்டாகவும் இருக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

Advertisment

அஜித் குமாரின் சகோதரர் திடீரென திரைத்துறையில் நடிப்பதால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே அஜித் நடிகராகக் கோலோச்சிய பிறகு அவரது சகோதரரும் நடிக்க வந்துள்ளதால் அவருக்கு தற்போது அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. 

actor brother ajith kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe