நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். 

Advertisment

துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸ் மற்றும் ஸ்பெய்னில் நடந்த 24ஹெச் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். இப்போட்டியை தொடர்ந்து டிசம்பரில் நடக்கும் ஆசியன் லெ மான்ஸ் தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் மற்றும் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். போட்டிகளில் இவரது தொடர்பான வீடியோக்கள் வைரலாகின. கடைசியாக தன்னை பார்த்து விசில் அடித்து ஆராவாரம் செய்த ரசிகர்களை எச்சரிக்கும் வீடியோ வைரலானது. 

Advertisment

இந்த நிலையில் அஜித் ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’ யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது திரை வாழ்க்கை குறித்தும் கார் ரேஸ் வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். கார் ரேஸ்நில் விபத்துகள் நடந்தது குறித்து பேசிய அவர், “நான் விபத்துக்குள்ளாகும்போது அந்த சூழலை எப்படி கையாள்வது என்பது தான் எனக்கு உடனடியாக தோன்றும் விஷயம். முதலில் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளதா, அது எவ்வளவு தீவிரமானது, கார் எந்த அளவு சேதம் அடைந்துள்ளது, அதை நான் மீண்டும் ஓட்ட முடியுமா என்று தான் பார்க்க தோன்றும். 

விபத்துக்கு பிறகு குடும்பத்தை பற்றி கவலைப்படுவேன். என்னுடைய கரியருக்காக அவர்களை இந்த அளவு மன அழுத்தத்திற்கு கொண்டு செல்வது நியாயம் இல்லை. துரதிஷ்டவசமாக எனக்கு சில பயங்கரமான விபத்துக்கள் நடந்திருக்கிறது. இதேபோல் மற்ற கார் ஓட்டுநர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் நான் ஒரு நடிகர் என்பதால் அது தலைப்பு செய்தியாகிவிடுகிறது. அதே சமயம் இதுவரை எனக்கு ஏற்பட்ட விபத்துகள் என்னுடைய கார் ரேஸ் கரியரை முடித்துக்கொள்ளும் அளவுக்கு மோசமாக நடக்கவில்லை. அது எனக்கு கிடைத்த பாக்கியம். 

Advertisment

சினிமாவில் இருக்கும் போதே எனக்கு 29 அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று நீங்கள் மற்றவர்களை குறை கூறலாம் அல்லது பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேறலாம். வெற்றி ஒரு காட்டுக்குதிரை போல யார் வேண்டுமானாலும் அதில் ஏறலாம் ஆனால் அதை அடக்க முடியாவிட்டால் அது உங்களை தள்ளிவிடும்” என்றுள்ளார்.