Advertisment

சிறுவர்களை வைத்து பான் - இந்தியா படமெடுக்கும் பிரபல இயக்குநர்!

12 (43)

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதையடுத்து அவர் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுளதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதையடுத்து இன்று காலை இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் ‘வை ராஜா வை’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே படத்தின் தமிழ் பதிப்பின் டைட்டில் டீசர் இன்று மாலை மணிரத்னம் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல் தெலுங்கு பதிப்பினை இயக்குநர் சுகுமாரும் மலையாள பதிப்பினை இயக்குநர் பிளெஸ்ஸியும் கன்னட பதிப்பினை ரிஷப் ஷெட்டியும் இந்தி பதிப்பினை அனுராக் கஷ்யப்பும் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதில் சிறுவர்கள் வெயிலை வைத்து திரைக்காட்சி காட்டும் ஒரு கொட்டகத்தில் படம் பார்க்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. படத்திற்கு டெக்ஸ்லா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அந்த காலத்தின் அனுபவங்களை நினைவுகூரும் வகையில் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

aishwarya rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe