அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜாஉள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.
இப்படம்  தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. 

Advertisment

அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.