ஆந்திர பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு மற்றும் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா பச்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Advertisment

நடிகை ஐஸ்வர்யா ராய், மேடையில் பேசும் முன் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். பின்பு பேசிய அவர், “ஒரே ஒரு சாதிதான், அது மனிதகுலம் என்ற சாதி. ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான் அது உள்ளத்தின் மொழி. ஒரே ஒரு கடவுள் தான், அவர் எங்கும் நிறைந்தவர்” என்றார். மேலும், “சத்ய சாய்பாபா அடிக்கடி ஐந்து குணங்களை கூறுவார். அவைதான் ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையானது என்பார். அந்த குணங்கள்... ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு மற்றும் பாகுபாடு” என்றார். 

Advertisment