காற்று வெளியிடை படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான அதிதி ராவ், தொடர்ந்து செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார். இடையே மற்ற மொழிகளிலும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது கைவசம் விஜய் சேதுபதி நடிப்பில் கிஷோர் பண்டு ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள மௌன படமான காந்தி டாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் ஒரு படமும் ஹாலிவுட் ஒரு படமும் வைத்துள்ளார். இதனிடைய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது காதலரான சித்தார்த்தை கரம் பிடித்தார்.
இந்த நிலையில் அதிதி ராவ் தன் பெயரில் மோசடி நடந்து வருவதாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “யாரோ ஒருவர் என்னைப்போல நடித்து வாட்ஸ் ஆப்பில் எனது படங்களை பயன்படுத்தி புகைப்படக் கலைஞர்களுக்கு ஃபோட்டோ ஷூட்டுக்காக மெசேஜ் செய்து வருகிறார். அது நான் இல்லை. இதுபோன்று நான் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டேன்.
வேலைக்காக நான் எந்த தனிப்பட்ட நம்பரையும் பயன்படுத்துவதில்லை. எல்லாமே என்னுடைய டீம் வழியாகவே நடக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அந்த நம்பரை நம்பாதீர்கள். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் என்னுடைய டீமிற்கு தெரியப்படுத்துங்கள்” என்றுள்ளார்.
Follow Us