தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ரஜினி, விஜயகாந்த் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றார். ஆனால் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்பு சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு அரசியலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். 2014 ஆம்ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற உறுபினராக உருவெடுத்த அவர், 2019 ஆண்டு அமைச்சராகவும் உயர்ந்தார். ஆபால் கடந்த 2024 சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
முழு நேர அரசியலுக்கு பின்பும் பரத் நடித்த கில்லாடி, பிரஷாந்த் நடித்த புலன் விசாரணை 2, ஆர்.கே.நடித்த என் வழி தனி வழி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்திருந்தார். இதையடுத்து ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகியிருந்த ரோஜா தற்போது 12ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிப்பில் லெனின் பாண்டியன் என்னும் தலைப்பில் உருவாகும் படத்தில் ரோஜா நடிக்கிறார். இவரது கதாபாத்திர அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/05/14-7-2025-11-05-17-47-12.jpg)
கதாப்பாத்திர அறிமுக வீடியோவில் அவர் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளதால் அவருக்கு பிரபுதேவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரோஜாவை தவிர்த்து இப்படத்தில் கங்கை அமரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திர அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. துரைராசு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இவரோடு சரத்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ரோஜாவின் ரீ-எண்ட்ரி படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
Follow Us