Advertisment

போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் கைது

08 (28)

தொடர்ந்து அதிகரித்து வரும் போதைக் கலாச்சாரத்தில் திரைப்பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். சென்னை வளசரவாக்கத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் புழக்கத்திலிருந்து வருவதாகப் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மெத்தப்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வெங்கடேஷ் குமார் (31) என்பவரும் கைது செய்யப்பட்டார். 

Advertisment

இவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இதில் திரைப்பட நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா (30) மற்றும் துணை நடிகை வின்சி என்கிற நிவேதா (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா (31), யஷ்வந்த் (24),  ஸ்ரீ ராம் (32), ஆல்வின் (26),  தமீம் நிஸ்வான் (27) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Advertisment

இதுவரை, கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்தும் மெத்தப்பெட்டமைன் மற்றும் க@சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் இதைப் புகைப்பதற்கான மெஷின்கள், இத்துடன் விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த போதைப்பொருட்கள் அந்த இரு இளைஞர்களால் பெங்களுருவில் இருந்து கடத்திவரப்பட்டு இந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்டுவந்ததாகத் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து, நடிகைகள் மற்றும் அவர்களது நண்பர்கள் இந்த போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

கைதான நடிகைகளில் ஒருவர் கதாநாயகியாகவும் மற்றொருவர் துணை நடிகையாகவும் நடித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்களைத் தவிர்த்து வேறு எவருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe