ஏ.எஸ் முகுந்தன் இயக்கத்தில் சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில் ஆனந்தராஜ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’. இதில் முனீஸ் காந்த், தீபா, ஆராத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

Advertisment

அந்த வகையில் நடிகை ஆராத்யா பேசுகையில், “இங்க பொதுவா ஹீரோயின்ஸ்களுக்கு ஒரு ஸ்டீரியோடைப் வச்சிருக்காங்க. 25 வயசுக்குள்ள இருக்கணும், கல்யாணம் ஆகிருக்கக்கூடாது, பாய் ஃப்ரெண்ட் இருக்கக்கூடாது... இப்படியெல்லாம் நான் கடந்து வந்த சினிமால பார்த்திருக்கேன். இது எந்த வகையிலன்னு தெரியல. சமீபத்துல மாரி செல்வராஜ் ஒரு இன்டர்வியூல சொல்லியிருப்பாரு, டெடிகேட்டிவான ஆர்டிஸ்ட் மட்டும் தான் நான் எடுத்தேன், மத்தபடி அவங்க மலையாளினு நான் பார்க்கலன்னு பேசியிருப்பார். 

Advertisment

மாரி செல்வராஜ் சார் தமிழ்லயும் டெடிகேட்டிவான ஆர்டிஸ்ட் இருக்கிறாங்க சார். நானும் ஒரு நாலு படம் பண்ணி இருக்கேன் சார். காந்தி கண்ணாடி படத்துல அர்ச்சனா அம்மாவின் டீனேஜ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன் சார், அதுக்கு ஆப்போசிட்டாவும் நடிச்சிருக்கேன் சார். ஸ்டண்டும் பண்ணி இருக்கேன் சார்.  டெடிகேஷன்னா என்ன சார்... நாங்களும் எங்களால முடிஞ்ச உழைப்ப போடுறோம், ஆனா அது உங்க பார்வைக்கு வந்து சேரல. அது எப்படி சேர்க்கிறதுன்னு எங்களுக்கு தெரியல. அதுக்கு மீடியா தான் உதவனும். இப்ப நான் சொல்ல போற விஷயம் என் வயசுக்கு மீறின ஒரு பேச்சா கூட இருக்கலாம், இங்க ஓடுற குதிரையில தான் எல்லாரும் பந்தயம் கட்ட தயாரா இருக்காங்க. அதனால இங்கேயும் ஓடுறதுக்கு தயாரான குதிரையும் இருக்கு, ஒருவாட்டி அதுல பந்தயம் கட்டித்தான் பாருங்களேன், அது எவ்வளவு தூரம் ஓடுதுன்னு” என்றார்.