சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நடித்துள்ளார்கள். இதன் மூலம் ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பியிருக்கிறார்.
இவர்களுடன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாரிகியுள்ளது. சமீபத்தில் பட நாயகன் தர்ஷன் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றிருந்தார். இவர் சிவாஜியுடன் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ரோஜா இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
ரோஜா பேசுகையில், “என்னுடைய முதல் படத்துல எப்படி யாரும் எதிர்பாராமல் ஒரு நடிகையா நடிச்சேனோ, அதே மாதிரி தான் இந்த படத்துலையும் நடிச்சேன். முழு நேர அரசியல்வாதியா ஆன பிறகு படங்கள்ல நடிக்கிறத விட்டுட்டேன். ஏன்னா நான் நடிக்கிறதால டைரக்டருக்கோ தயாரிப்பாளருக்கோ டேக் பிரச்சனை வரக்கூடாதுன்னு. இடையில தெலுங்குலையும் தமிழ்லையும் டிவியில சில நிகழ்ச்சிகள தொகுத்து வழங்கினேன். சில நிகழ்ச்சிகள்ல ஜட்ஜாவும் இருந்திருக்கேன். என்னோட பிரண்டு சுப்பு(இப்பட தயாரிப்பாளர்களில் இருவர்) இந்த கதைப் பத்தி சொன்னார். இதுல வர ஒரு கேரர் நான் பண்ணா சரியா இருக்கும்னு சொன்னார். அதற்கு நான், இப்போ நடிக்கிறது இல்லையேன்னு சொன்னேன். ஒருவாட்டி கதை கேளு, பிடிச்சிருந்தா பன்னு, இல்லன்னா வேணாம்னு சொன்னார்.
வீரா படம் பண்ணும் போது நான் சுப்புவெல்லாம் நல்ல நண்பர்கள். அவரோட அப்பா தான் வீரா படத்தோட தயாரிப்பாளர். அதனால சுப்பு சொல்றார்னா ஏதாவது இருக்கும்னு கதை கேட்டேன். கேட்கும் போது ரொம்ப ஹார்ட் டச்சிங்கா இருந்துச்சு. எனக்கு ஒரு நல்ல கேரக்டர் தான் அவர் சஜஸ்ட் செஞ்சு இருந்தார். அதனால் கண்டிப்பா பண்ணனும்னு ஓகே சொல்லிட்டேன். ஒரே செட்யூல்ல முடிக்கணும்னு நினைச்சோம். ஆனா கங்கை அமரன் சாருக்கு திடீர்னு உடல் பிரச்சினை ஏற்பட்டதால மூணு செட்யூல்ல முடிச்சோம்.
இப்ப இருக்குற வாழ்க்கையில எல்லாருமே சிட்டி லைப்ல பிஸியா இருக்காங்க. அவங்கள ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டு போய் அங்க இருக்குற பாசம், எமோஷ்னல் எல்லாத்தையும் இந்த காட்டியிருக்கோம். இதுல கங்கை அமரனுக்கு ஜோடியா நான் நடிச்சிருக்கேன். ஒவ்வொரு நாளும் கங்கை அமரன் ஷூட்டிங்கிற்கு வரும்போது பாட்டு பாடிட்டே வருவார். நீங்க என்னோட ட்ரீம் கேர்ள், உங்க பாட்டை பார்த்தவன் இன்னைக்கு உங்களோட ஹீரோவா நடிக்கிறேன் என்பார். அவர் ஒரு லெஜெண்ட். அவர் இப்படி ஜோவியலா அன்பா பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இந்த படத்துல சிவாஜியோட பேரன் தர்ஷன், ஏந்த பந்தாவும் இல்லாம ஷூட்டிங்கிற்கு வருவார். டைரக்டர் பாலச்சந்திரனை பத்தி சொல்லியே ஆகணும். அந்த பெயரிலேயே ஒரு பவர் இருக்கு. பழைய பாலச்சந்தர் மாதிரி இவரும் ஆகணும்னு நான் ஆசைப்படறேன். அவருடைய இயக்கத்தில் நடிச்சது ரொம்ப ஈசியா இருந்துச்சு. எல்லாமே அவரே சொல்லி கொடுத்துடுவார். கண்டிப்பா இந்த படம் மக்களுக்கு பிடிக்கும். நானும் இன்னொரு ரவுண்டு வர அவங்க ஹெல்ப் பன்னுவாங்க” என்றார்.
Follow Us