யூடியூபில் பிரபலமாகி வெள்ளித்திரையில் நடித்து வருபவர் ஷாரா. குறிப்பாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மீசைய முறுக்கு, கோமாளி, ரோமியோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் சம்பளம் தொடர்பாக வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

Advertisment

அதில் அவர் கூறியதாவது, “இப்ப படம் பேசுறவங்களெல்லாம் இன்ஸ்டாவுல பாலோயர்ஸ் எவ்வளவு இருக்குன்னு பார்த்துட்டு தான் சம்பளமே பேசுறாங்க. இன்ஸ்டாவுல ஃபாலோயர்ஸ வளர்க்குறதுக்கு என்கிட்ட தகுதி இல்லையே. எனக்கு கூந்தல் கிடையாது, கொழு கொழுன்னு கண்ணம் கிடையாது, தாடி மட்டும் தான் இருக்கு. அதுவும் நரைச்சு போய் இருக்கு. 

Advertisment

என்னால கவர்ச்சி கூட காட்ட முடியாது. ரீல்ஸு பண்ணவும் பிடிக்காது. ஃபாலோயர்ஸ் ஏத்த எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க” என்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.