ஓமன் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த இரு நாடு மோதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறந்துள்ளனர். இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. கவிஞர் வைரமுத்து, பாலிவுட் நடிகை ஃஓரா ஃபதேகி உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்கும் நிலையில் புதிதாக நடிகர் சதீஷ் இணைந்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ பட விழாவில் பேசிய அவர், “எங்க பட டைட்டிலை ஈரானும் அமெரிக்கவும் பாடி ஒன்று சேர வேண்டும். இங்க இருக்கிற யாரோ ஒருவர் இதை சொல்வதால் நடக்குமா எனக் கேட்டால் அது அப்படி கிடையாது. கடவுளை வேண்டிப்போம். அவர் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து அதை நடத்துவார் என நம்புவோம். சீக்கிரம் இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/378-2026-03-07-15-45-35.jpg)