சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா இன்று (13.9.2025) நடைபெற்றது. இந்நில்கழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியலில் இந்திய நாட்டு ஆளும் கட்சியினருக்கும், புதிய மற்றும் பழைய எதிர்க்கட்சியினருக்கும் சவாலாக இருந்து கொண்டு 2026 இல் பார்க்கலாம் அப்படியென்று தனக்கே உரியப் புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜா அவர்கள் இந்த சிம்பனியை எழுதி லண்டனில் ரெக்கார்ட் பண்ண சென்றது மிகப்பெரிய சாதனை.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்று அவரை வாழ்த்தினார். அதுமட்டுமில்லை ரெக்கார்டிங் முடித்துக்கொண்டு வந்த பிறகு அவருக்கு விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் வரவேற்றது அவருக்குப் பெரிய கௌரவம் செலுத்தவேண்டும் அப்படி என்று மாபெரும் விழா பிரம்மாண்ட மனிதனுக்கு விழா நடத்தி இந்த மாதிரி அரசு செலவில் நமது கண்ணுக்கும் காதுக்கும் விருந்து அளித்திருக்கிறார். அதிசய மனிதர்களை நான் புராணத்தில் படித்திருக்கிறேன். இதிகாசத்தில் படித்திருக்கிறேன். ஆனால் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா” எனப் பேசினார்.
இவ்விழாவில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.