பஞ்சாமி மொழியில் பிரபல நடிகராக இருக்கும் வரிந்த சிங் குமான் தற்போது காலமாகியுள்ளார். இவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். 2009ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றார். மிஸ்டர் ஆசியாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் உலகளவில் ரசிகர்களை கொண்ட நடிகரும் பிரபல பாடி பில்டருமான அர்னால்டின் பாராட்டை இவர் பெற்றுள்ளார். அதோடு அர்னால்டின் உடற்பயிற்சி நிறுவன பொருட்களின் ஆசியாவில் விளம்பரப்படுத்த பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். 

Advertisment

இவர் உலகத்தின் முதல் சைவ தொழில்முறை பாடிபில்டர் என அழைக்கப்படுகிறது. சினிமாவை பொறுத்தவரைப் பஞ்சாபியில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘கபடி ஒன்ஸ் அகெய்ன்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். மேலும் 2014 ஆம் ஆண்டு ‘ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்’ படம் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு 2019ஆம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான ‘மர்ஜாவான்’ மற்றும் 2023ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டைகர் 3’ படத்திலும் நடித்திருந்தார். இதுதான் இவர் நடித்த கடைசிப் படம். 

Advertisment

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் பாடி பில்டிங் வீடியோவிற்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் 1 மில்லியன் ஃபாலோயர்களை இவர் வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் தன் கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக மருத்துவமனை சென்றிருந்தார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்ய அதை முடித்துவிட்டு உடனே வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென மரணமடைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது திடீர் மறைவு அவரது நண்பர்கள் மத்தியிலும் பஞ்சாபி மற்றும் இந்தி திரைத்துறையிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இவரது மறைவிற்கு பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அடே இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்ஜத் சிங்கும் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இவர்களை தவிர்த்து பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.     

Advertisment