மாடலாக இருந்து பின்பு பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக மாறி நடிகராக உருவானவர் ஆரவ். விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு நாயகனாக ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ எனும் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘ராஜபீமா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதனிடையே வில்லனாக துணை முதல்வர் உதயநிதி நடித்த கலகத் தலைவன் மற்றும் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும், அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த பெருமைமிகு, அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் என்னை மாற்றியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/01/17-7-2025-11-01-12-48-00.jpg)
இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ஆரவ் ஸ்டூடியோஸ்’ துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். ஆரவ் ஸ்டூடியோஸ் என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும் இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் ஆரவ் ஸ்டூடியோஸ் மூலம் இத்திரைப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/16-6-2025-11-01-12-44-54.jpg)