டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அபிஷன் ஜீவிந்த், “போற ஒவ்வொரு இடத்திலும் சொல்லிக்கிட்டே இருந்தேன், ஹீரோவா நடிக்கலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருந்தப்போ, ரஜினி சார் சொன்ன அந்த மோட்டிவேஷன் தான் இந்த முடிவை எடுக்க வச்சுதுன்னு. ரஜினி சாரை மீட் பண்ணும் போது ஹீரோ ஆகிட்டீங்க... அப்படின்னு கேட்டாரு. அதனால ஒரு சர்க்குள் கம்ப்ளீட் ஆன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு இருந்த அபியும் இன்னைக்கு இருக்குற அபியும் வேற வேற ஆள் மாதிரி ஃபீல் பன்றேன்.
அனஸ்வராவுடன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட்டாச்சு. எல்லாரும் அதை ரசிச்சாங்க. அவருடன் இணைஞ்சதுல ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா எதிர்காலத்துல இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு நம்புறேன். தயாரிப்பாளர் மகேஷ் ரெண்டு நாள் முன்னாடி கால் பண்ணி, நான் ஏதாவது தப்பு பண்ணனாடா, சொல்லு நான் அதை திருத்திக்குறேன்னு கேட்டார். இந்த குவாலிட்டி எத்தனை பேர்கிட்ட இருக்குன்னும் தெரியல. நானும் சில விஷயங்களை அவர்கிட்ட சொன்னே, அவரும் ஆமா அது தவறுன்னு ஏத்துக்கிட்டார். அவர்கிட்ட பேசுறதுக்கு எந்த தயக்கமும் பயமும் இருக்காது. மனசுல என்ன நினைக்கிறனோ அதை தைரியமா பேசலாம். அந்த அளவுக்கு அவரோட நட்பு இருக்கு.
சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் ஒரு சக்சஸ் இப்படித்தான் இருக்குமானு என்கிட்ட கேட்டாங்க. எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. என்னையும் பயங்கரமா சப்போர்ட் பண்ணி, ஸ்டார்னு நம்ப வச்சு மோட்டிவேட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இப்ப நான் சொல்றேன், நான் - மகேஷ் - சௌந்தர்யா ரஜினிகாந்த்... மூணு பேரும் பெரிய படம் ஒன்னு பண்றோம், இன்னும் நிறைய படம் பண்ணுவோம்” என்றார்.
Follow Us