டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தற்போது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.
இதனையொட்டி புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளது. அப்போது அபிஷன் ஜீவிந்திடம் படத்தின் டீசரை பார்க்கும்போது பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸம் உங்களிடம் இருப்பதாக எழுந்த விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கி விட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால் இது போன்ற கருத்துக்கள் வருகிறது. டீசரில் வரும் காட்சிகள் பயங்கர எனர்ஜி காட்சிகளிலிருந்து வந்தது. அதற்கான காரணம் படத்தில் இருக்கிறது. ஆனால் படம் பார்க்கும்போது விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என நம்புகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/17-39-2026-01-28-16-28-30.jpg)