டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த் கதாநாயகனாக ஒரு படம் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கும் அவரது மகள் சௌந்தர்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்திற்கு ‘வித் லவ்(With Love)’ என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசரை பார்க்கையில் காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ளது தெரிய வருகிறது.
Follow Us