கேரளாவில் ஆண்டுதோறும் மாநில திரைப்பட விருதுகள் 1969ஆம் அண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 54வது திரைப்பட விழா வழங்கப்பட்டது. இதில் 2023ஆம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக பிரித்விராஜ் - பிளெஸ்ஸி கூட்டணியில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படம் 9 விருதுகள் வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு படங்களுக்கான 56வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலாச்சார அமைச்சர் சஜி செரியன் திருச்சூரில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். இந்தாண்டு விருதின் நடுவர் குழு தலைவராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் அதிகபட்சமாக 9 விருதுகள் வென்றுள்ளது. சிறந்த நடிகராக மம்மூட்டி அறிவிக்கப்பட்டுள்ளர். இதன் மூலம் 7வது முறை இந்த மாநில விருதை அவர் பெறவுள்ளார். வெற்றி பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.
சிறந்த படம்: மஞ்சும்மல் பாய்ஸ்
சிறந்த நடிகை - ஷாம்லா ஹம்சா(ஃபெமினிச்சி பாத்திமா)
சிறந்த நடிகர் - மம்முட்டி(பிரம்மயுகம்)
சிறந்த இயக்குநர் - சிதம்பரம்(மஞ்சும்மல் பாய்ஸ்)
சிறந்த குணச்சித்திர நடிகர்வ் - லிஜோமோல் ஜோஸ்(நடன்னா சம்பவம்)
சிறந்த குணச்சித்திர நடிகை - சௌபின் ஷாஹிர் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் சித்தார்த் பரதன் (பிரம்மயுகம்)
சிறப்பு ஜூரி விருது - ஆசிப் அலி, டோவினோ தாமஸ், தர்ஷனா ராஜேந்திரன், ஜோதிர்மயி(பாரடைஸ்)
சிறந்த இரண்டாவது படம் - ஃபெமினிச்சி பாத்திமா
சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபாசில் முகமது(ஃபெமினிச்சி பாத்திமா)
சிறந்த பிரபலமான திரைப்படம் - பிரேமலு
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் – பிரசன்ன விதானகே(பாரடைஸ்)
சிறந்த அசல் திரைக்கதை - சிதம்பரம்(மஞ்சும்மல் பாய்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை - லாஜோ ஜோஸ் மற்றும் அமல் நீரத், (பொகெய்ன்வில்லா)
சிறந்த இசையமைப்பாளர் - சுஷின் ஷியாம்(பொகெய்ன்வில்லா)
சிறந்த பின்னணி இசை – கிறிஸ்டோ சேவியர்(பிரம்மயுகம்)
சிறந்த பாடலாசிரியர் - வேடன்(குதந்திரம்... - மஞ்சும்மல் பாய்ஸ்)
சிறந்த பின்னணிப் பாடகி - ஜெபா டாமி(ஆரோரம்... - அம் ஆ) படத்திற்காக
சிறந்த பின்னணி பாடகர் – கே.எஸ்.ஹரிசங்கர்(கிளியே... ஏஆர்எம்)
சிறந்த படத்தொகுப்பாளர் - சூரஜ் இஎஸ்(கிஷ்கிந்தா காண்டம்)
சிறந்த ஒளிப்பதிவு - ஷைஜு காலித்(மஞ்சுமெல் பாய்ஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - அஜயன் சாலிசேரி(மஞ்சும்மேல் பாய்ஸ்)
சிறந்த விஎஃப்எக்ஸ் – ஜித்தின் லால், ஆல்பர்ட் தாமஸ், அனுராதா முகர்ஜி மற்றும் சலீம் லஹிர்(ஏஆர்எம்)
சிறந்த நடன அமைப்பாளர் - சுமேஷ் சுந்தர் மற்றும் ஜிஷ்ணுதாஸ் எம்.வி,(பூகேன்வில்லா)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - சமீரா சனீஷ், ரேகாசித்திரம்(பூகேன்வில்லா)
சிறந்த ஒப்பனை கலைஞர் - ரோனெக்ஸ் சேவியர்(பூகேன்வில்லா மற்றும் பிரம்மயுகம்)
சிறந்த ஒலி வடிவமைப்பு - ஷிஜின் மெல்வின் ஹட்டன் மற்றும் அபிஷேக் நாயர், (மஞ்சும்மல் பாய்ஸ்)
சிறந்த ஒலிக்கலவை – ஃபசல் ஏ பேக்கர் மற்றும் ஷிஜின் மெல்வின் ஹட்டன், (மஞ்சும்மல் பாய்ஸ்)
சிறந்த டப்பிங் கலைஞர்(ஆண்) - சயோனாரா பிலிப்(பரோஸ்)
சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - பாசி வைக்கம்(பரோஸ்)
Follow Us