கன்னடத்தில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘45’. சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் முன்னதாக வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் சமீபத்தில், படக்குழு வெளியிட்ட ‘ஆஃப்ரோ தபாங்’(Afro Tapang) பாடல் ரசிகர்களிடையே வரவவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள்.

Advertisment

இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதரால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான காட்சிகளுடன் இணைந்த ஜானி மாஸ்டரின் நடன அமைப்புகள் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இன்றைய இளைய தலைமுறையுடன் ஒத்திசைவாகச் செல்லும் இசையை வழங்கியுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.