Advertisment

‘சீலே’-க்கு என்ன அர்த்தம்? - 29* படக்குழுவின் விளக்கம்

08 (30)

இயக்குநர் ரத்னகுமார் ‘29*’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகியிருந்தது. 29வது வயதில் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் சவாலை காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் சொல்லியிருப்பது போல் டைட்டில் டீசர் அமைந்திருந்தது. மேலும் பட டீசர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் ரத்னகுமார், தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியது. படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘சீலே சீலே’(Seelay Seelay)எனும் பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலை சான் ரோல்டன் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். உமாதேவி எழுதியுள்ளார். இதையொட்டி ஒரு ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாடல் தலைப்பான சீலே-வுக்கு என்ன அர்த்தம் என்று மக்களிடம் கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஆனால் அதற்கு பெரும்பாலானோர் அர்த்தம் தெரியவில்லை என்றும் ஒரு சிலர் அவர்களுக்கு தோன்றிய அர்த்தத்தை பதிவு செய்தனர். 

இறுதியில் அதற்கான அர்த்தத்தை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கூறுகையில், “ரிதம் படத்தில் வரும் காற்றே என் வாசல் வந்தாய் பாடலில் இந்த வார்த்தை இடம்பெறும். அதற்கான சரியான அர்த்தம் தெரியவில்லை. இருந்தாலும் அந்த வார்த்தை என்னை ஈர்த்தது. பின்பு இந்தப் பாடல் பதிவு செய்த பிறகு அவதார் படத்தில் எல்லா விஷயமும் ஒன்றாக இணையும்போது அவர்களை இணைக்கிற விஷயமாக சீலே வார்த்தை எனக்குத் தெரிகிறது” என்றார். பின்பு இயக்குநர் ரத்னகுமார் கூறுவையில், “படத்தின் நாயகனுக்கு நிறைய விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கான வார்த்தை அவனுக்கு சரியாக அமைவில்லை. அப்போது அவன் எமோஷனை வெளிப்படுத்துவதற்கான வார்த்தையாக சீலேவை பார்க்கிறேன்” என்றார்.

seanrolden director rathna kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe