30வது கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கியது. வரும் 19ஆம் தேதி முதல் மொத்தம் எட்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளியான திரைப்படங்கள் திரையிட தகுதி பெற்றதாகும்
இதில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 19 படங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. அந்தப் படங்களில் பாலஸ்தீன அரசியலை மையமாக எடுக்கப்பட்ட பாலஸ்தீனம் 36, யெஸ், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காசா மற்றும் ஆல் தட்ஸ் லெஃப்ட் ஆஃப் யூ ஆகியவை இருக்கின்றன. மேலும் இந்தி படமான சந்தோஷ் படமும் இருக்கிறது. இப்படம் ஏற்கனவே நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடந்த திரைப்பட திரையிட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த அனுமதி மறுப்பு, சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு பிரிவினர் மத்திய அரசை கண்டித்து போராட்டமும் நடத்தியுள்ளார்கள். இது தற்போது திரைத்திறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/08-19-2025-12-16-18-40-48.jpg)