Advertisment

ராங்கால் அமித்ஷாவே சரணம்! இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். போட்டா போட்டி! நில மோசடி -பண கோல்மால்! தமிழக பா.ஜ.க. மீது டெல்லி அதிருப்தி!

rr

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் சில திட்டங்களோடு டெல்லிக்குப் போகிறார்.''”

Advertisment

"திடீர் விசிட்தானே?''”

"ஆமாங்க தலைவரே, அரசுமுறை பயணமாக 16-ந் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின், மறுநாள் இரவே சென்னை திரும்புகிறார். புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவையும், பிரதமர் மோடியையும் டெல்லியில் சந்திக்கிறாரு. குடியரசு தலைவரை சந்திக்கும் போது, தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கும்படி வலியுறுத்துவார்னு சொல்லப்படுது. அதேசமயம், ஸ்டாலினின் திடீர் டெல்லி பயணத்தை உற்றுநோக்கும் பா.ஜ.க. மேலிடத் தொடர்பாளர்களோ, "மோடியை -ஸ்டாலின் சந்திக்கும்போது, தமிழக கவர்னர் கொடுத்த புகார் அறிக்கையின் அடிப்படையில் மோடி, தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் மற் றும் அமைச்சர்கள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்புவார்'னு தங்களோட எதிர்பார்ப்பை வெளிப்படுத்து றாங்க. டெல்லியில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் திட்டமும் இருக்கிறதாம்.''”

Advertisment

rr

"எடப

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் சில திட்டங்களோடு டெல்லிக்குப் போகிறார்.''”

Advertisment

"திடீர் விசிட்தானே?''”

"ஆமாங்க தலைவரே, அரசுமுறை பயணமாக 16-ந் தேதி டெல்லி செல்லும் ஸ்டாலின், மறுநாள் இரவே சென்னை திரும்புகிறார். புதிய குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவையும், பிரதமர் மோடியையும் டெல்லியில் சந்திக்கிறாரு. குடியரசு தலைவரை சந்திக்கும் போது, தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்கும்படி வலியுறுத்துவார்னு சொல்லப்படுது. அதேசமயம், ஸ்டாலினின் திடீர் டெல்லி பயணத்தை உற்றுநோக்கும் பா.ஜ.க. மேலிடத் தொடர்பாளர்களோ, "மோடியை -ஸ்டாலின் சந்திக்கும்போது, தமிழக கவர்னர் கொடுத்த புகார் அறிக்கையின் அடிப்படையில் மோடி, தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் மற் றும் அமைச்சர்கள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்புவார்'னு தங்களோட எதிர்பார்ப்பை வெளிப்படுத்து றாங்க. டெல்லியில் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் திட்டமும் இருக்கிறதாம்.''”

Advertisment

rr

"எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கிரிவலம் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். இன்னும் 10 நாட்களுக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும்னு தெரியுது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக் கும்னு எடப்பாடித் தரப்பும் ஓ.பி.எஸ். தரப்பும் பரிதவிக்குது. விசாரணையில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்தும் நீதிபதி கேட்ட கேள்விகள் குறித்தும் மீண்டும் மீண்டும் தங்களின் வழக்கறிஞர் களிடம் விவாதித்தபடி இருக்கிறார் கள். ஆனாலும் இரண்டு தரப்புக்குமே தங்களுக்குத்தான் சாதகமாகத் தீர்ப்பு வரும் என்பதில் முழுநம்பிக்கை வரவில்லையாம். அதனால்தான் அமித்ஷா மூலம் ஏதாவது செய்ய முடியுமான்னு அவர் வீட்டையும் அலுவலகத் தையும் சுற்றிச் சுற்றி வருது அவர்கள் தரப்பு.’''

rr

"அமித்ஷா உதவ முன் வருவாரா? உதவுவார்னா யாருக்கு உதவுவார்?''”

"இரு தரப்பிடமும் அமித்ஷா சார்பில் பேசிய அவரது பெர்சனல் செக்ரட்டரி, ’சட்ட ரீதியாக அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்னு நீதி மன்றமும் தேர்தல் ஆணையமும் சொல்லட்டும். அதேபோல் கட்சித் தொண் டர்கள் யார் பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதும் நிருபணமாகட்டும். அதன் பிறகுதான் உங்களைச் சந்திப்பேன்னு அமைச்சர் சொல்லி இருக்கிறார்னு தெரிவித்திருக்கிறார். இருந்தும் விடாத இருதரப்பும். எங்களுக்கு சாதகமாக எல்லாமே நடக்கணும்னு கேட்கத்தான் அமித்ஷாவை சந்திக்க விரும்புகிறோம்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு, தீர்ப்புக்குப் பிறகுதான் சந்திப்புன்னு மறுபடியும் அவர் பி.ஏ. சொல்ல, தீர்ப்பு எங்க பக்கம் வந்துவிட்டால் நாங்க ஏன் உங்க தயவை எதிர்பார்க்கப்போறோம்னு உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டிருக்குதாம் ஓ.பி.எஸ். தரப்பு.''”

"இந்தியா எச்சரித்தும் சீனா கப்பலைத் தங்கள் நாட்டுக்குள் இலங்கை அனுமதிச் சிருக்கே?''”

"சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தங்கள் அம்மந்தோட்ட துறைமுகத்துக்குள் அனுமதித்திருக்கிறது. இது குறித்து இங்குள்ள அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. குறிப்பாக, இதற்கு தனது எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்துன்னு எச்சரித்திருக்கிறார். மேலும் "இப்படிப்பட்ட இலங்கைக்கு, டோர்னியர் 228 வகை போர் விமானம் உட்பட ராணுவ உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் வழங்குகிற இந்தியா, இனியாவது இலங்கையின் துரோகத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும்'னு ராமதாஸ் குரல் கொடுத் திருக்கிறார்.''”

"பா.ஜ.க.வில் பெரும் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வுக்கு தமிழகம் முழுக்க பல இடங்களிலும் அலுவலகம் அமைக்க குழு போடப்பட்டது. இந்தக் குழுவோ, அரசுக்கு சொந்தமான இடங்களையும் ஆக்கிரமித்து, கட்சி அலுவலகங்களைக் கட்டத் தொடங் கியதாம். கோடிக்கணக்கில் இதற்காக பணம் வசூலிக்கப்பட்டும், இப்படி எதற்காக நில மோசடியில் சிக்கவேண்டும் என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே பரவலாக எழுந்திருப்பதோடு, டெல்லிக்கும் புகார் போயிருக்கிறது. இதனால் பா.ஜ.க. அலுவலகம் ஒன்றைத் திறந்து வைக்க இருந்த கட்சியின் தேசியத் தலைவரான நட்டா, தன் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டாராம். இந்த நிலையில், கட்சிக்கு இடம் வாங்க வசூலித்த தொகையில் குளறுபடி நடந்த விவகாரத்தில், கட்சிப் பிரமுக ரான கேசவவிநாயகம் உள்ளிட்டவர்களை விசாரிக்குமாறு, பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை, தமிழக நிர்வாகிகளுக்கு உத்தர விட்டிருக்கிறதாம்.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் கம்யூட்டர் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.. எனினும், பெரும்புள்ளிகளுக்கு நெருக்கமான எஸ்.வி. கம்யூட்டர் என்ற நிறுவனத்திடமே இவற்றைக் கொள்முதல் செய்யவேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு போடப்பட்டிருக்குதாம். இதற்காக ஏ.டி.பஞ்சாயத்தின் மாநில அலுவலம், ஒவ்வொரு பஞ்சாயத்துத் தலைவரிடமும் பேசுகிறதாம்.''”

nkn170822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe