Advertisment

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல் நலக்குறைவால் காலமானார்.

R

தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய ஆக்கங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார்.

Advertisment

நண்பர்களான பிரேம் - ரமேஷ் இருவரும் இணைந்து ஒரே பெயரில் எழுதி வந்தனர். இவர்களின் எழுத்தில் ஒரு காலத்தில் 108 கிளிகள் இருந்தன,  கனவில் பெய்த மழையைப் பற்றி இசைக்குறிப்புகள்,  20 கவிதைகளும் 2000 ஆண்டுகளும், ஆகியவை குறிப்பிடத் தகுந்த படைப்புகளாக இருந்தன.

Advertisment

பிரேம் உடன் முரண் ஏற்பட்டு நட்பு முறிந்த பின், ரமேஷ் தொடர்ந்து ரமேஷ் பிரேன் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள், உள்ளிட்டவற்றை எழுதி வந்தார். இவரின் நல்ல பாம்பு நாவல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

அண்மையில் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதை ரமேஷ் பிரேதனுக்கு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்து ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், வாசகர்ள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe