மகளிருக்கான உலக செஸ் கோப்பை போட்டியில் 19 வயதான இந்தியாவின் பெண் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
உலக மகளிர் செஸ் உலகக் கோப்பையானது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியை இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் எதிர் கொண்டார். உலக கோப்பை தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கும் வீராங்கனை திவ்யா, இறுதி நேரத்தில் டைபிரேக்கர் சுற்றில் வெற்றி வாகை சூட்டியுள்ளார். முன்னதான போட்டிகள் டையில் முடிந்த நிலையில் இரண்டாவது சுற்று யார் வெற்றி என்பதை தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருந்த நிலையில், கடுமையான போட்டியில் திவ்யா தேஷ்முக் கோனெரு ஹம்பியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு தங்கப் பதக்கமும் இரண்டாவது இடம் பிடித்த இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பிக்கு வெள்ளிப் பதக்கமும் பெற இருக்கிறார்கள். இப்போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும் இந்திய வீராங்கனைகள் வென்று சாதனை படைத்துள்ள நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.