உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. 

Advertisment

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2025ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 84.3 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி 8வது இடம் பிடித்தார். இதன் காரணமாக அவர் பதக்கம் வெல்வதற்கான அடுத்தகட்ட சுற்றுப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

அதே சமயம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெ ன்ற பாகிஸ்தானைச் சார்ந்த அர்ஷத் நதீமும் ஈட்டி எறிதலில் 10வது இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அடுத்தகட்டமாகப் பதக்க வெல்வதற்கு 6 பேர் தகுதி பெற வேண்டிய நிலையில் இந்திய வீரர் சச்சின் யாதவ் 86.27 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 5வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.