இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடன் ஒரு நாள் தொடர் ஒன்றில் இந்திய அணி மோத உள்ளது. இந்த நிலையில் நியூஸிலாந்துடன் விளையாட உள்ள அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக பிசிசிஐ தேர்வாளர்கள் இன்று கூடுகின்றனர்.
இந்தத் தேர்வில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்றும், வேக பந்து வீச்சாளர் முகமது சமி அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. டி 20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் இந்த தொடர் கடைசி இருதரப்பு ஒருநாள் தொடர் ஆகும். எனவே இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், ஆட்டத்திற்கான யுக்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்திய கேப்டன் ஷுப்மன் கில் விஜய் ஹசாரே கோப்பையில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உடல் உபாதைக் காரணமாக சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் டி20 போட்டித் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
50 ஓவர் போட்டிகளுக்குப் பிறகு, இந்தியா பிளாக் கேப்ஸ் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்த போட்டிகள், அந்த முக்கிய தொடருக்கான ஒரு இறுதி ஒத்திகையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வருகின்ற டி20 உலக கோப்பையில் இந்தியா நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில். இந்த போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/ind-nz-cricket-2026-01-03-23-20-25.jpg)